வடகொரிய அதிபர் உணவு தட்டுப்பட்டால் குறைவாக சாப்பாடு உண்ணுமாறு நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியாவில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே உணவு பொருள்களின் பற்றாக்குறை அதிரிப்பதால், நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில், வருகிற 2025 ஆம் ஆண்டு வரை குறைவான உணவுகளை உண்ணுமாறு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அதிபர் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “நாட்டின் விவசாய உற்பத்தி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாய துறை தானிய உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற தவறியதால் உணவு பொருட்களின் தேவை பாதித்துள்ளது” என்று கூறினார். மேலும் பொருளாதார தடை, கொரோனா பரவல் ஆகியவற்றால் உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தற்போது கனமழையால் சேதமடைந்த விவசாய பகுதிகளில் நிவாரண பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
இந்த பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுக்கு எச்சரிகை விடுத்தனர். மேலும், 2025 ஆம் ஆண்டுக்கு முன் வடகொரியா, சீனா இடையே சுங்கச்சாவடிகளை மீண்டும் திறக்கும் வாய்ப்புகள் குறைவு என்றும் பாதுகாப்பு அலுவலர்கள் கூறினர். இந்த நிலையில் அணுசக்தி, ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்தும் சர்வதேச தடைகளால் வடகொரியாவின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது.
மேலும், வடகொரியாவில் ஏற்பட்டுள்ள இந்த உணவு தட்டுப்பாடு, கடந்த 1990-இல் நிலவிய பஞ்சம் மற்றும் பேரழிவுடன் பொருந்துவதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். அந்த சமயத்தில், சுமார் 30 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இதுபோன்ற மோசமான பஞ்சத்தை மீண்டும் வடகொரியா எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. இதனால் தான் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் தற்போதைய நிலையை வெளிப்படையாக பேசினார்.