Categories
உலக செய்திகள்

“எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும்!”.. சும்மா மிரட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.. பிரான்சுக்கு பதிலடி கொடுத்த பிரிட்டன்..!!

பிரான்ஸ் அரசு, சும்மா எங்களை மிரட்டி கொண்டிருக்க வேண்டாம், எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும் என்று பிரிட்டனுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டுக்குரிய மீன்பிடி படகுகள் அனைத்த்திற்கும் பிரிட்டன், தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அரசு, பிரெக்ஸிட்டிற்கு பின்பு பிரிட்டன் எந்த ஒப்பந்தத்தையும் சரியாக பின்பற்றவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பிரான்ஸ் அடுத்த மாதம் 2 ஆம் தேதிக்குள் மீன்பிடித்தல் விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தம் செய்யப்படவில்லை எனில் பிரிட்டனைச் சேர்ந்த மீன்பிடி படகுகளை தடுத்து விடுவோம் எனவும் இரு நாட்டிற்கும் இடையே பயணிக்கும் பிரிட்டன் படகுகளுக்கும், ட்ரக்குகளுக்குமான சுங்க சோதனை போன்ற விதிமுறைகளையும் கடுமையாக விதிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது மட்டுமல்லாமல் இதற்கு மேலும் தங்களுக்கு பொறுமை இல்லை. பிரிட்டனுக்குரிய சேனல் தீவுகளுக்கு செல்லக்கூடிய மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் எனவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் செய்தி தொடர்பாளர் Gabriel Attal எச்சரித்திருக்கிறார். ஆனால் தற்போது வரை அமைதியாக இருந்து வந்த பிரான்ஸ், எதற்கெடுத்தாலும் இவ்வாறு மிரட்டினால் நாங்கள் அமைதி காக்க மாட்டோம், எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும் என்று தெரிவித்திருக்கிறது.

அதாவது, பிரிட்டன் அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருப்பதாவது, பிரான்ஸ் எங்களின் நெருங்கிய தோழர். அந்நாட்டிடமிருந்து இவ்வாறு மிரட்டல்களை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. பிரான்ஸ் நாடு, விடுக்கும் எச்சரிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு உடன்பட்டு இருக்கவில்லை. பிரான்ஸ், இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து பின் வாங்க வேண்டும். இல்லையெனில், பிரிட்டனும் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பழி வாங்கும் முயற்சிகளில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |