தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படிஅமேசான் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும். அவ்வாறு அமேசான் ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட் போன்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
சமீபத்திய மாடல்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், ஐசிஐசிஐ, கோட்டக் வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பாக OnePlus, samsung, apple, Xiaomi, iQOO பிராண்டுகளில் இந்த சலுகை கிடைக்கிறது. மேலும் நவம்பர் 2ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை தொடரும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.