இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் , பாகிஸ்தான் வீரர் முகமது அமிர் இருவருக்கும் இடையே ட்விட்டரில் மோதல் வெடித்துள்ளது .
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும். இதனிடையே இப்போட்டியை மையமாக வைத்து ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர் இருவருக்குமிடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் முதலில் இந்திய அணியின் தோல்வியை முகமது அமிர் கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தோல்வியடைந்ததால் ஹர்பஜன் சிங் தனது டெலிவிஷனை உடைக்கவில்லையா’ என கேட்டிருந்தார் . இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹர்பஜன்சிங் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் அணியின் வெற்றிக்குரிய சிக்சரை முகமது அமிரின் பவுலிங்கில் தான் அடித்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.
Fixer ko sixer.. out of the park @iamamirofficial chal daffa ho ja pic.twitter.com/UiUp8cAc0g
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 26, 2021
இதற்கு முகமது அமிர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங்க் வீசிய ஓவரில் அப்ரிடி தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் அடித்து விளாசி இருந்த வீடியோவை பதிவிட்டு ஹர்பஜன் சிங்கை சீண்டினார்.இதனால் ஆத்திரமடைந்த ஹர்பஜன்சிங் கடந்த 2010-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தைக் கையில் எடுத்தார் .மேலும் ‘இதற்கு எவ்வளவு பணம் வாங்கினீர்கள்’ என்று முகமது அமிரை சாடினார் .இதனால் இருவருக்குமிடையே ட்விட்டரில் மோதல் வெடித்துள்ளது .
https://t.co/tZGLtwBKCa me busy tha @harbhajan_singh apki bowling dekh raha tha test jab LaLA ne apko 4 bowls pe 4 sixes mare thay but cricket hai lag sakte but test cricket me 😅😅😅😅thora ziada ho gia tha
— Mohammad Amir (@iamamirofficial) October 26, 2021