Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பட்டியலினத்தவருக்கு முடிவெட்ட மாட்டோம்… வைரலாகும் சர்ச்சை வீடியோ… பின் நடந்த சம்பவம்!!

தலைவாசல் அருகே சலூன் கடையில்  பட்டியலினத்தவருக்கு முடி வெட்ட மறுத்தது தொடர்பாக  சமூக வலைதளங்களில் பரவிய சர்சையை வீடியோவால் பெண் ஒருவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள  ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்த பூவரசன் என்பவர் நான்கு நாட்களுக்கு முன் அங்குள்ள லோகு என்பவரின் சலூன் கடைக்கு முடி வெட்ட சென்ற போது அவருக்கு  முடிவெட்ட மறுப்பதோடு அவரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே பூவரசன் லோகுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சலூன் கடை அமைந்துள்ள கட்டிடத்தின் உரிமையாளர் அன்னக்கிளி என்பவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை வீடியோவில் பதிவு செய்த பூவரசன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதுடன், தலைவாசல் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். வன்கொடுமை தடுப்பு பிரிவில் லோகு, பழனிவேல், அன்னக்கிளி ஆகிய 3 பேர் மீதும் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு பிரிவில் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்னக்கிளி லோகு ஆகியோர் தற்பொழுது தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |