கொரோனா தொற்று அதிகமாக ஐரோப்பா மணடலத்தில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பா மண்டலமானது 53 நாடுகளை உள்ளடக்கியது. அங்கு கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பானது 18% உயர்ந்துள்ளது. குறிப்பாக உலகின் அதிக அளவு உயிரிழப்பும் ஐரோப்பா மண்டலத்தில் தான் காணப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சமீபகாலமாக 14% மரணங்கள் ஐரோப்பா மண்டலத்தில் பதிவாகியுள்ளது என்று வாராந்திர தரவுகள் தெரிவித்துள்ளன. அதிலும் அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.