Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அங்கே என்னுடைய சைக்கிள் இருக்கு” மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

சைக்கிளை திருடி அதை நிறுத்தத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை நால்ரோடு சந்திப்பு அருகில் ஜானிபாட்சா என்பவர் வசித்து வருகிறார். இவர் துணிக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி ஜானிபாட்சா வழக்கம்போல் தனது சைக்கிளுக்கு பூட்டு போட்டு தனது கடையின் முன்பு நிறுத்திவிட்டு உறங்க சென்றார். இதனையடுத்து ஜானிபாட்சா மறுநாள் காலையில் கடைக்கு வெளியே வந்து பார்த்தபோது அவரது சைக்கிள் திருடு போனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜானிபாட்சா பல்வேறு இடங்களில் தனது சைக்கிளை தேடி பார்த்து வந்தார். அப்போது ஜானிபாட்சா சைக்கிள் பெருந்துறை பேருந்து நிலையம் எதிரே உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் நிற்பதை பார்த்தார். அதன்பின் ஜானிபாட்சா அதன் நிறுத்த உரிமையாளரிடம் கூறியபோது “தனது திருட்டு போன சைக்கிள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே டோக்கன் கொடுத்து சைக்கிளை எடுக்க வரும் நபரை நீங்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று உரிமையாளரிடம் அவர் கூறினார். மேலும் இதுகுறித்து காவல்துறையினரிடமும் ஜானிபாட்சா புகார் கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சைக்கிள் நிறுத்த உரிமையாளரிடம் திருடன் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றனர். அதன்பின் மறுநாள் காலையில் ஜானிபாட்சா சைக்கிள் நிறுத்தத்திற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு சைக்கிள் இல்லாததை பார்த்து ஜானிபாட்சா அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக சைக்கிள் நிறுத்த நிர்வாகியிடம் ஜானிபாட்சா கேட்டபோது “சொந்த வாகனமா அல்லது திருட்டு வாகனமா  என்றெல்லாம் நாங்கள் பார்க்க மாட்டோம். டோக்கன் தருபவரிடம் வாகனத்தை ஒப்படைப்பது தான் எங்கள் பொறுப்பு” என்று அவர் கூறினார்.

இதன் காரணமாக ஜானிபாட்சா அருகிலுள்ள சைக்கிள் நிறுத்தத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு ஜானிபாட்சா சைக்கிள் நின்றது. இதனைத்தொடர்ந்து ஜானிபாட்சா சைக்கிள் நிறுத்த நிர்வாகியிடம் கூறி, தனது சைக்கிளை சங்கிலியால் பூட்டு போட்டு விட்டு சென்று விட்டார். இதற்கிடையில் காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த திருடர் ஒரு வாரம் கடந்தும் சைக்கிளை எடுப்பதற்காக அங்கு வரவில்லை. இதனால் சைக்கிள் நிறுத்த உரிமையாளர் ஜானிபாட்சாவை வர சொல்லி சைக்கிளை அவரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு சைக்கிளை திருடி நிறுத்தத்தில் விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |