தஞ்சை அருகே சூரியக் கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் கனகவல்லி (33)ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (28) சம்பவத்தன்று சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஆடு மேய்க்கச் சென்ற அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு கொலை செய்து பெண்ணின் சடலத்தை புதரில் வீசி உள்ளனர். இதுபற்றி போலீசாருக்கு தெரிய வர, பெண்ணின் சடலத்தை மீட்டு இதில் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories
ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்…. வன்கொடுமை செய்து கொடூர கொலை…. தஞ்சையில் அதிர்ச்சி….!!!!
