தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகமாக மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் வழி முறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. மழைக்காலத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் அருகே செல்ல வேண்டாம். இடி மின்னலின் போது மின்சாதன பொருட்களை பயன்படுத்தக் கூடாது. வீட்டு சுவர்களில் நீர் கசிவு ஏற்பட்டால் அந்தப் பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும். ஈர கைகளால் சுவிட்சுகள் இயக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.