முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் நிலவி வருகிறது. இதற்கிடையில் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியதும் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கட்சியில் சேர்ப்பதற்கு தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என்று பேசியது அதிமுகவில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அதிமுக கட்சித் தொண்டர்கள் “அதிமுகவின் கழக பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்” என்று குறிப்பிட்ட போஸ்டரை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் என்ற குறிப்பிட்ட சுவரொட்டிகள் ஒட்டாமல் சமூக வலைதளங்களில் மட்டுமே பரப்பி வருகின்றனர்.