சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நேற்று மருது சகோதரர்கள் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்றம் ஒரு வெட்டி மன்றமாக செயல்படுகிறது. இதை நீங்கள் செய்திருந்தால் நாங்களும் செய்கிறோம் என்கிற புராணம் பாடும் மன்றமாக உள்ளது. ஆட்சி செய்பவர்கள் தங்கள் சொந்த பணத்தில் மக்களுக்காக எதுவும் செய்வதில்லை. மக்களுடைய வரிப் பணத்தில் மக்களுக்கான திட்டப்பணிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதே உண்மையான ஜனநாயகம்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போதே அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். தற்போது திமுகவின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். அது குறித்து இப்போது என்னால் கருத்துக் கூற இயலாது. அதிமுகவின் செயல்பாடுகள் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து வெளியேறினேன். எனவே அவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய எனக்கு விருப்பமில்லை என்று பேசியுள்ளார்.