Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நம்மை காலி செய்ய ஆங்காங்கே சதி திட்டம் தீட்டுகிறார்கள் – திருமாவளவன் பேச்சு …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்று அதிலே எனக்கு மிகவும் என்னை கவர்ந்தது நான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஊன்றுகோல் தந்தபோது நீதான் முதுகெலும்பு தந்தாய், இது வந்து அப்படியே சிலிர்க்கிறது உடம்பு, மெய் சிலிர்ப்பு அப்படி என்று சொல்வார்கள் இல்லையா அப்படி மெய்சிலிர்க்கிறது . அதாவது கூனிக்குறுகி இருப்பவர் கையில் ஒரு ஊன்றுகோல் கொடுக்கிறது ஒரு பெரிய உதவி தான் .

அதுவும் ஒரு அறச்செயல் தான், அதுவும் ஒரு நல்ல செயல்தான், கூனிக்குறுகி இருபவருக்கு ஊன்றுகோல் கொடுத்து நீ நிமிர்ந்து நில், எழுந்து நில் அல்லது நடந்து போ ஆனால் அவனுடைய கூன் நிமிராது ஊன்றுகோல் அவன் தடுமாறி கீழே விழாமல் இருப்பதற்கு ஊன்றுகோல் தருகிறார்கள். அவன் எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோல் தருகிறார்கள், அதுவும் உதவி தான், அதுவும் வழிகாட்டுதல் தான், அதுவும் ஒரு அறப்பணி தான், அதுவும் ஒரு நற்பணி தான்.

ஆனால் நீ ஊன்றுகோல் தரவில்லை அவன் நிமிர்ந்து நிற்பதற்கு முதுகெலும்பு தருகிறாய். எவ்வளவு ஆழமான ஒரு பார்வை இதை வந்து நான் எனக்கான ஒரு பாராட்டு என்ற அடிப்படையில் நான் இதை பார்க்கவில்லை, அவர் எவ்வளவு ஆழமாக ஒரு சமூகத்தை உற்று நோக்குகிறார். அந்த சமூக விடியலுக்கான போராட்டத்தை பார்க்கிறார். போராட்டம் எத்தகைய தாக்கத்தை அது தருகிறது, எவ்வளவு பெரிய விளைவை தருகிறது விடுதலைச் சிறுத்தைகளின் பணி இத்தகைய புரட்சிகரமான பணியாக இருக்கிறது.

இது வெறும் ஊன்றுகோல் தருகின்ற பணி அல்ல, 4 வீடு கட்டி கொடுத்தோம், சோறு போட்டோம், ஆயிரம் பேருக்கு நாங்கள் மூன்று சக்கர வண்டி கொடுத்தோம் அப்படிங்கிற ஒரு என்.ஜி.ஓ பணியல்ல. அடுத்தடுத்த தலைமுறை நிமிர்ந்து நிற்பதற்கு கூனிக்குறுகி வாழாமல் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு உரிய முதுகெலும்பை தருகிறார்.

முதுகெலும்பு கொடுத்தால் ஜீன் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்கு போய்க்கொண்டிருக்கும். இப்போது உனக்கு முதுகெலும்பு வந்து விட்டால் அடுத்தடுத்து தலைமுறைக்கு முதுகெலும்பு இருக்கும் என்று அர்த்தம். இப்போ உன்னிடத்தில் தன்மானம் இருக்கிறது என்றால் உன் வாரிசுகளுக்கு தன்மானம் வரும். அது மரபணு வழியாக போகக்கூடிய ஒரு பண்பு. ஈவு இரக்கம் என்ற பண்பு எனக்கு இருந்தால் என்னுடைய வாரிசுகளுக்கு அந்த ஈவு இரக்கம் என்பது மரபு வழியாக அந்த டிஎன்ஏ வழியாக போய் சேரும்.

ஆகவே முதுகெலும்பை தந்தால் இனி வரக்கூடிய தலைமுறையினர் யாரும் கூனிக்குறுகி கிடக்க மாட்டான், தன்மானம் இழந்து கிடைக்க மாட்டான் , தலை நிமிர்ந்து வீறுநடை போடுவான். ஆழமான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஒரு சிந்தனை என திருமாவளவன் நெகிழ்ந்து போனார். மேலும் இதை தந்தை பாவலர் ஆ.பா.தமிழ் அன்பன் கூட எடுத்துச் சொன்னார்,

நிலம் எல்லாம் புதைந்து இருக்கும் சாதி கண்ணிவெடிகளை மிதிக்காமல் நடக்கிறாய், அதாவது நம்மை காலி செய்வதற்கு அங்கங்க சதி திட்டம் தீட்டுகிறார்கள், அந்த சதி வலையில் சிக்காமல் நெளிவு சுளிவாக போய்க்கொண்டு இருக்கிறாய். இதையெல்லாம் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. இது எல்லோராலும் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாது என திருமாவளவன் தெரிவித்தார்.

Categories

Tech |