தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகிறது. அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி குறைப்பு அக்டோபர் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. கிரெடிட் ஸ்கோர் 800க்கும் மேல் உள்ளவருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதைவிட குறைவாக இருந்தால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். மேலும் இந்தியாவில் ஒப்பிடும்போது இந்த வங்கியில் தான் வட்டி விகிதம் மிகக் குறைவாகும்.