Categories
அரசியல்

”இஸ்லாமியர்”னு குறி வைக்குறீங்க… இது பாஜகவின் கொடுங்கோல் செயல்…! சீமான் கடும் கண்டனம் ..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “போதைப்பொருள் பயன்படுத்தியதற்கு நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் பழிவாங்கும் விதம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதானவர் இஸ்லாமியர் என்பதால் அவரை குறிவைத்து அரசாங்கமானது காய்களை நகர்த்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஆர்யன் கானை ஜாமீனில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதை தடுப்பு பிரிவானது, போதைப்பொருள் விருந்து நடைபெற்றதாகக் கூறப்படும் சொகுசு கப்பல் நிர்வாகத்தின் மீது எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது குறித்து தெரியவில்லை. மேலும் தவிர்க்க முடியாத பல்வேறு சந்தேகங்கள், விடை தெரியாத கேள்விகள் இருந்தாலும் ஷாருக்கானின் மகன் என்பதாலேயே ஆர்யன் கான் இந்த வழக்கில் சிக்கியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. பாஜக அரசின் இந்த கொடுங்கோல் செயல்களுக்கு நான் கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன்” என்பதாகும்.

Categories

Tech |