மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கிராமத்தில் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்பவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் வைரலாகி வருகின்றது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே டாமிளா என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு அந்த கிராம பஞ்சாயத்து சார்பில் ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதன்படி அந்த கிராமத்தின் சார்பில் ஒரு குழு வீடு வீடாக சென்று கழிவறையை சோதனை செய்தது. அதில் அந்த கிராமத்தில் 71 வீடுகளின் கழிப்பறைகள் சுத்தமாக இருந்தது. இதையடுத்து அவர்களின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் முதல் ஐந்து பேருக்கு கலர் டிவி, செல்போன், கடிகாரம், சேர் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.