சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதேசமயம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றினார். இதனிடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிக்கான மகாராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அணியின் துணை கேப்டனாக ராகுல் திரிபாதி பொறுப்பேற்க இருந்தார் . ஆனால் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையதால் அவருக்கு பதிலாக நௌஷத் ஷேக் பொறுப்பேற்க உள்ளார் . இதனிடையே எலைட் ‘குரூப் ஏ’ பிரிவில் உள்ள மகாராஷ்டிரா தனது லீக் போட்டிகளை லக்னோவில் விளையாடுகிறது. இதில் முதல் ஆட்டத்தில் தமிழக அணியை சந்திக்கிறது.
மகாராஷ்டிரா அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), நௌஷத் ஷேக், கேதாா் ஜாதவ், யாஷ் நஹா், அஸிம் காஸி, ரஞ்சீத் நிகம், சத்யஜீத் பச்சாவ், தரன்ஜித்சிங் தில்லான், முகேஷ் சௌதரி, அக்ஷய் பால்கா், மனோஜ் இங்லே, பிரதீப் தாதே, ஷம்ஷுஸாமா காஸி, ஸ்வப்னில் ஃபல்பகா், திவ்யாங் ஹிங்கானேகா், சுனில் யாதவ், தன்ராஜ்சிங் பா்தேசி, ஸ்வப்னில் குகாலே, பவன் ஷா, ஜெகதீஷ் ஸோபே.