ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற 3 பேர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது.
எசெக்ஸ் பகுதி Harwich என்ற இடத்தின் அருகில் உள்ள கடல் பகுதியில் ஒரு படகில் இருந்து 2 புலம்பெயர்ந்தோரை அதிகாரிகள் மீட்டனர். மேலும் 3 பேர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற அச்சத்தில் மீண்டும் தேடுதல் பணி துவங்கப்பட்டு இருப்பதாக கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தேடுதல் பணியில் ஹெலிகாப்டர் மற்றும் ஒரு விமானம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு தண்ணீரில் விழுந்து மாயமானவர்கள் சோமாலி நாட்டவர்கள் என்றும், அவர்கள் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியா நோக்கி புறப்பட்டு இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. இதனிடையில் இந்த சோக சம்பவம் நடந்த இடம் வழியாக பொதுவாக புலம்பெயர்வோர் பயணிப்பதில்லை என்று தெரிகிறது. இதற்கு முன் அவ்வழியாக பயணிக்க முயன்றவர்கள் உயிரிழந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.