இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகின்ற டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வருகின்ற டி20 உலக கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது .மேலும் அவர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு பதவியிலிருந்து விலக உள்ளார் .இதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது.மேலும் இப்பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் நேற்று முறைப்படி விண்ணப்பித்துள்ளார் .அதே சமயம் அணியில் பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு பராஸ் மாம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் ஷர்மா ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இருவருமே தேசிய கிரிக்கெட் அகாடமியில் ராகுல் டிராவிட் உடன் பணியாற்றி வருகின்றனர்.அதேசமயம் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண் மற்றும் அனில் கும்பிளே ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.