ஒன்பது மாதம் முதல் 4 வயதுடைய குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்தியாவில் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணியாததால் தான். இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்புக்காக கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். இதற்கு ஓட்டுனரே பொறுப்பேற்க வேண்டும். அதுவும் அந்த ஹெல்மெட்டுகள் பிஎஸ் ஐ தரத்துடன் கூடிய ஹெல்மெட்டாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தையுடன் செல்லும் போது அதிகபட்ச வேகத்தை 40 கிலோ மீட்டராக நிர்ணயிக்கவும் முடிவெடுக்க உள்ளது.