பேஸ்புக்கில் 300% வெறுப்புணர்வு கருத்துகள் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பில் பதிவிடப்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும், 53 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் வெறுப்புணர்வான கருத்துக்களும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் 300% வெறுப்புணர்வு கருத்துக்கள் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பில் பதிவிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 300% பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துகள் பரவியதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் தவறான தகவல்கள் அளவுக்கதிகமாக பரவி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய பயனாளர்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு, வன்முறை மற்றும் மோதல் உள்ளிட்டவற்றை தூண்டும் வகையில் அளவுக்கதிகமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே ஃபேஸ்புக்கில் இந்த வெறுப்புணர்வு கருத்துக்கள் அளவுக்கதிகமாக பதிவாகி வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.