Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இது திருப்பி அடிக்கும் காலம்….. திருமாவளவன் எச்சரிக்கை…!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், மன்னர் மன்னன் காதில் போய் கேட்டேன் இது நியூட்டனின் மூன்றாம் விதி என்று…  திருப்பி அடி என்பதைத்தான் எழுதி இருக்கிறார்களா என்று கேட்டேன், ஆம் என்றார். ஏனென்றால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. எதை செய்தாலும்…

நீ ஒருவரை திட்டினால் அதே மாதிரி இன்னொருவர் உன்னை திட்டுவார். டேய் என்றால் அவனும் டேய் என்பான், குழந்தைகளிடம் பேசி பாருங்கள். ஒருத்தனை வந்து நாம அடிச்சி அடக்கி ஒடுக்கி விட முடியும் என்பதெல்லாம் கிடையாது. அதெல்லாம் ஒரு காலகட்டம் என்றால் தொடரலாம், நீடிக்கலாம் அந்த ஆதிக்கம் செலுத்துகிற வரையில். ஆனால் தலைகீழாக மாறும்….

உதாரணத்திற்கு பௌத்தத்தை எடுத்து கொள்ளலாம். பவுத்தம் என்பது உலகமெங்கும் கோலோச்சிய ஒரு பெரும் மதம். இந்தியாவில் எங்கு திரும்பினாலும் பௌத்தம் செழித்து வளர்ந்திருந்த காலம். ஆனால் இன்றைக்கு என்ன நிலை ? இது ஒரு உதாரணம் புரிந்து கொள்வதற்காக சொல்கிறேன். அப்படியே தக்க வைக்க முடியாது, நீட்டிக்க முடியாது.

பௌத்தம் இன்றைக்கு சுவடுகளாக இருக்கின்றன, அடையாளங்களாக இருக்கின்றன , தோண்டுகின்ற இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை இன்றைக்கு நாம் கண் போனதாகவும், கால் போனதாகவும், கை உடைந்ததாகவும், முகம் உடைந்ததாகவும் தான் நாம் கண்டெடுக்க முடிகிறது. ஆனால் அது ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்தது. எட்டு திக்கிலும் பௌத்தமே செழித்து இருந்தது.

இன்றைக்கு தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அத்தனை பேரும் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்தவர்கள் தான். முன்னால் பௌத்தர்கள் தான் . இந்த தலைகீழ் மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கும் சமூகத்தில், சுழற்சி வடிவில் மேல் கீழ் என்று அல்ல ஒரு சுழற்சி வடிவில் அது நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது ஒரு விதி, அடிமைப்பட்டு கிடப்பவர்கள் அடிமைத்தனத்திலே கிடக்க முடியாது. அவர்கள் வெகுண்டு எழுவார்கள்,வீறுகொண்டு எழுவார்கள், விடுதலை பெறுவார்கள் இது ஒரு தவிர்க்க முடியாத இயங்கியல் விதி.

இயங்கியல் விதியை நியூட்டன் சொல்லுகிறான் அதனால் அது நியூட்டன் விதி என்கிறோம் அவ்வளவுதான். அது நியூட்டன் புதிதாகக் உருவாக்கியது அல்ல. இயற்கையில் இருக்கின்ற இயங்கியல் போக்கை அவன் ஆய்ந்து அறிந்து கண்டு சொல்கிறான்.ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.ஆகவே அதை நாம் அரசியல் மொழியில் சொல்கிறோம் திருப்பி அடி என்று… நாம் சொல்லவில்லை என்றாலும் அவன் அடிப்பான் அது வேறு…  அது நடக்கும் அது வேறு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒடுக்குகின்றவர்களின் கை இன்னும் வலிமையாக இருப்பதால் அந்த திருப்பி அடித்தல் என்பது வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது,அது ஒரு புரட்சியாக மாறாமல் இருக்கிறது என திருமா தெரிவித்தார்.

Categories

Tech |