Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவா ரஜினி ஒவ்வொரு முறையும் அதை செய்கிறார்’… சச்சினின் வைரல் டுவீட்…!!!

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு சச்சின் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். இதையடுத்து ரஜினிக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஒவ்வொரு முறையும் தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு. தலைவா ரஜனிகாந்த் ஒவ்வொரு முறையும் அதை செய்கிறார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்கிறார். தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |