தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அரசு நிர்வாகத்தில் யாரும் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும், நல்ல நிர்வாகத்துக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்றும், அவர் கூறினார்.கடந்த ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்யப் புறப்பட்ட போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துதையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் சாசனத்தின்படி, ஆளுநருக்கு உரிய மரியாதையை முதல்-அமைச்சர் அளித்து வருவதாகவும், அவர் கூறினார்.
மேலும் பேசுகையில் இது ஜெயலலிதா ஆட்சியும் அல்ல எடப்பாடி ஆட்சியும் அல்ல அரசியல் சாசனச் சட்டம் என்ன அதிகாரத்தை ஆளுநருக்கு கொடுத்து இருக்கிறதோ அந்த அதிகாரத்தை மதிப்பதற்கு இந்த முதலமைச்சர் தயாராக இருப்பார்.ஒரு நாளும் தயங்க மாட்டார்.
அதே நேரத்தில் மத்திய அரசினுடைய அதிகாரம் அல்லது ஆளுநரருடைய அதிகாரங்கள் வரம்பு மீறிப் போகும் என்று சொன்னால் அதற்கு பழனிச்சாமி போல பயப்படக்கூடிய முதலமைச்சரும் இவர் அல்ல. அதைதான் கலைஞர் அவர்கள் அருமையாகச் சொன்னார் உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று சொன்னார். அந்த பாலிசியில் தொடர்ந்து முதல்வர் நடப்பார். மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவது ஏற்கத் தகுந்தது அல்ல என்றும் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.