Categories
தேசிய செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய அலர்ட்…. இனி குழந்தைகளுக்கு இது கட்டாயம்…. அரசு அதிரடி….!!!!

நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. அதை தடுக்க பல்வேறு விதிகளை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான வரைவு விதிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 129, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி மோட்டார் வாகனங்கள் சட்டம் திருத்தப்பட்டது.

இந்தப் பிரிவில் உள்ள விதியின் படி, மோட்டார் சைக்கிளில் செல்லும் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நடவடிக்கைகளை விதைகளின் மூலம் மத்திய அரசு மேற்கொள்ளலாம். இதையடுத்து கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய விதிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தில் செல்லும் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மோட்டார் சைக்கிளை ஓட்டுப் அவரிடம் இணைக்க பாதுகாப்பு சேணம் பயன்படுத்தப்படும்.

அதுமட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்லும் 9 மாதம் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகள் தலைக்கவசம் அணிந்து இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். பிஐஎஸ்- ஆல் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் கொண்ட தலைக்கவசங்கள் பயன்படுத்த வேண்டும். 4 வயதுக்கு உட்பட்ட குழந்தையுடன் செல்லும் மோட்டார் சைக்கிளின் வேகம் 40 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |