Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் புதிய தளர்வுகள்…. இனி இதற்கெல்லாம் அனுமதி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ளது. அதற்கான புதிய நிலையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய வழிகாட்டுதலை வெளியிட்ட தலைமைச் செயலாளர், அசாம் மாநிலத்தில் முப்பத்தி ஒரு சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து புதிய ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.

திருமணங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை 50 நபர்கள் ஆக குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம். இறுதி சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி. மத வழிபாட்டுத் தலங்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் ஒரு மணிநேரத்திற்கு 60 பேர் அனுமதிக்கப்படுவார்கள். திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி என்று அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |