Categories
தேசிய செய்திகள்

மாணவிகள் கழிப்பறையில் இருந்த பொருள்…. அதிர்ச்சியில் உறைந்த துப்புரவு பணியாளர்…. கேரளாவில் பயங்கரம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியின் கழிவறையில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணி ஒருவர் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வைத்திருந்த வாலியின் உள்ளே தேங்காய் போன்ற பொருள் இருப்பதை பார்த்தார்.

முதலில் அதனை தேங்காய் என்று நினைத்த பெண்மணி அதை தொட்டு பார்த்த பிறகு அது தேங்காய் இல்லை என்பதை உணர்ந்து சமையல்காரரிடம் இது குறித்து தெரிவித்தார். அப்போது அந்த வெடிகுண்டை வெளியே எடுக்க முயற்சித்த பிறகு அது வேறு ஏதோ பொருள் என்பதை உணர்ந்துள்ளார். பின்னர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் அதனை ஆய்வு செய்து சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு என்பதை கண்டுபிடித்தார்.

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி அருகில் உள்ள செம்மண் குவாரிக்கு எடுத்துச் சென்று செயலலிளக்க செய்தனர். அதன் பின் போலீசார் நாட்டு வெடிகுண்டுகள் வேறு எதாவது பள்ளியில் உள்ளதா என்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது கழிவறையின் பின்புறம் சுவரில் சில மர்ம நபர்களின் கால்தடங்கள் பதிவாகியிருந்தது. மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து வெடிகுண்டுகளை வைத்திருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |