Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

12 வயது மாணவி பரிதாப பலி… டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்!!

டெங்குவால் பள்ளி மாணவி பரிதாபமாக பலியான நிலையில் அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்து.

காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலில் பள்ளி மாணவி பலியானதால் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் கற்பக விநாயகர் தெருவில், வசித்து வருபவர் விஜயகுமார் மகள் ஸ்ருதி .12 வயதான ஸ்ருதிக்கு கடந்த வாரம் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இதையடுத்து மாணவி வசித்து வந்த 11- வது வார்டின் அனைத்து வீடுகள் மற்றும் மாணவி படித்த தனியார் பள்ளிகளிலும், நகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் அந்தப் பகுதியில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |