Categories
தேசிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை…. வதந்தி பரப்பினால் நடவடிக்கை…. முதல்வர் எச்சரிக்கை….!!!!

முல்லைப் பெரியாறு அணை குறித்து வீண் வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அணை ஆபத்தில் இருப்பதாகவும், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க போகிறார்கள் என்றும் சமூக ஊடகங்களில் சில காட்சிகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

தமிழக அரசு அனைத்து பிரச்சினைகளிலும் கேரள அரசுடன் ஒத்துழைத்து அவர் கூறிய அவர், இரு மாநிலங்களுக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தில் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

Categories

Tech |