கூலித்தொழிலாளி தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாலக்குறிச்சி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணனின் நண்பர் ஒருவர் ஒரு பெண்ணோடு மாயமாகியுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சரவணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.