Categories
சென்னை மாநில செய்திகள்

உடனே போங்க… 3 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 6 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை கவரும் வகையில் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன. அது ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு பரிசுகளை அறிவித்தனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் ஆர்வத்தை மக்களிடையே அதிகரித்து விதமாக தனியார் பங்களிப்புடன் சென்னை மாநகராட்சி பல்வேறு பரிசு பொருட்களை அறிவித்துள்ளது. இதன்படி முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கு குலுக்கல் முறையில் வெள்ளிக்காசு, குக்கர், நான்ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ் மற்றும் 3 லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |