Categories
தேசிய செய்திகள்

BREAKING: நீட் பிஜி கலந்தாய்வு நிறுத்தம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறவிருந்த மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 2013ஆம் ஆண்டிலிருந்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடை பெற்று அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பின்னர் இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதையும், உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் பொருளாதார இட ஒதுக்கீடு கொடுப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் இன்று முதல் நடைபெறவிருந்த முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்திவைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து நீதிமன்றம் இறுதி முடிவு செய்த பிறகே கலந்தாய்வை நடத்த வேண்டும் அதுவரை முதுகலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |