டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலியின் 10-வது அரைசதம் இதுவாகும். மேலும் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 9 அரைசதம் அடித்திருந்தார்.ஆனால் நேற்றைய போட்டியின் மூலம் விராட் கோலி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.