மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராச்சலம் தேர்தலை தள்ளி வைத்துள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் திரு.விக ஆகியோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.
அதன் பிறகு காவல்துறையினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 18 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க. மற்றும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட நான்கு நபர்களை தான்தோன்றிமலை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.