6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள குன்னூர் கிராமத்தில் வெள்ளத்துரை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் அச்சமடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமிக்கு தொல்லை கொடுத்த வெள்ளைத்துரையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.