Categories
தேசிய செய்திகள்

‘6 வயதில் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டில் இடம்’… ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவனின் சாதனைகள்…. குவியும் பாராட்டு..!!!

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவனுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

சாதனை புரிய வயது ஒரு தடை இல்லை என்பது உண்மைதான். அப்படி பெங்களூருவைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். பெங்களூரில் வசித்து வரும் ஸ்ரீ விஜய் மற்றும் வசந்தி என்பவரின் மகன் தருண். விஜய் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இவர் தனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேலையை விட்டுவிட்டு தனது மகனை பார்த்து வந்தார். தருண் சிறு வயதாக இருக்கும்போது அவருக்குள் இருக்கும் திறமைகளை கண்டுபிடித்த தாயார் அவரை 14 மாத குழந்தையாக இருந்த போது மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்.

அங்கு அவருக்கு ஆசிய ஸ்மார்ட் குழந்தை என்ற விருது கிடைத்தது. அதிக நினைவாற்றல் கொண்ட இவர் இந்திய புக் ஆஃ ரெக்கார்டு புத்தகத்திலும் இடம்பிடித்தார். சர்வதேச அளவில் நடைபெற்ற விண்வெளி தொடர்பான போட்டியில் இவருக்கு  59 ஆவது இடம் கிடைத்தது. 5 வயதுக்குள் பல சாதனைகளைப் புரிந்தவர் தற்போது வேர்ல்டு புக் ஆஃ ரெக்கார்டு என்ற உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். கிராபிக் டிசைன் மற்றும் விண்வெளி குறித்த படங்களை வரைதல் போன்றவற்றை உருவாக்கி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். விண்வெளி மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் அனிமேஷன் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் உருவாக்கத் தொடங்கினார்.

இதுவரை 80 கிராபிக் படங்களை வரைந்துள்ளார். இவை அனைத்தும் இவர்தான் வரைந்தாரா? என்னும் அளவுக்கு அவ்வளவு தத்ரூபமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் உலகின் மிக இளம் வயது கிராபிக் டிசைனர் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்குபவர் என்ற புகழ் இவருக்கு கிடைத்துள்ளது. ஆறு வயது நிரம்பிய இந்த சிறுவன் இத்தனை சாதனைகளை புரிந்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |