Categories
கிரிக்கெட் விளையாட்டு

பத்திரிகையாளரின் கேள்விக்கு …. நெத்தியடி கொடுத்த ‘விராட் கோலி’…. வெளியான வீடியோ …..!!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி ஆவேசமாக பதிலளித்தார்.

7-வது டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று  துபாயில் நடந்தத இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியாக 15.7 ஓவரிலேயே பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இப்போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ‘அடுத்து நடைபெறும் போட்டியில் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டு, ரோஹித் சர்மா நீக்கப்படுவாரா ? ‘ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஷாக் ரியாக்சன் கொடுத்த விராட் கோலி,’ இந்த கேள்வியை தெரிந்துதான்கேட்டீர்களா ?, டி20 தொடரில்  ரோகித் சர்மா போன்ற அபாரமான வீரரை அணியிலிருந்து நீக்கவேண்டுமென  கூறுகிறீர்களா ? என்று கேட்டு சிரித்தார். இதைத்தொடர்ந்து அந்த செய்தியாளரிடம்,’ உங்களுக்கு சர்ச்சை ஏதாவது ஏற்படுத்த வேண்டுமென விரும்பினால் என்னிடம் முதலில் சொல்லி விடுங்கள், அதற்கேற்றவாறு நானும் நீங்கள் நினைப்பதுபோல் சர்ச்சையை  சர்ச்சை ஏற்படுமாறு பதில் கூறி விடுவேன்’ என்று கிண்டல் அடித்தார். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |