காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பூஞ்ச் மாவட்டம் பட்டா துரியன் பகுதியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஜியா முஸ்தபாவை அழைத்துக்கொண்டு போலீசாரின் வனப்பகுதியில் தேடுதல் நடத்த சென்றனர்.
அப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளத்தை காண்பதற்காக அங்கு சென்ற பொழுது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி முஸ்தபா கொல்லப்பட்டார். மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர். தாக்குதலின் போது காயமடைந்த முஸ்தபாவை மீட்டு கொண்டுவர முடியாத அளவிற்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் உக்கிரமாக இருந்ததாக காவல் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.