‘ஜெயில்’ படத்தின் அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கும் ”ஜெயில்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நந்தன்ராம், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அவர் தெரிவித்தார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.