தமிழகத்தில் இதுவரை 69% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாமில் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த முகாமில் 23,27,907 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதில் முதல் தவணை தடுப்பூசியை 69% பேரும் 2 வது தவணை தடுப்பூசியை 29% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் இந்திய அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை அடைவோம். தடுப்பூசி முகாம்களுக்கு நேற்று விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், இன்று வழக்கம் போல் செயல்படும். 43,லட்சம் தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.