Categories
உலக செய்திகள்

60வது ஆண்டு விழாவில்…. வீரர்களுக்கு பதக்கங்ககள் வழங்கல்…. மத்திய உள்துறை இணை அமைச்சர் பங்கேற்பு….!!

சீன படையினரை எதிர்த்து சிறப்பாக செயல்பட்ட இந்தோ- திபெத்திய எல்லை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்தோ- திபெத்திய எல்லையில் காவல் படையினர் என்ற அமைப்பு கடந்த 1962-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இவர்கள் இந்தியா மற்றும் சீனா இடையே சுமார் 3488 கிலோ மீட்டர் எல்லையில் இந்தியா ராணுவத்திற்கு பெரும் உதவி புரிகின்றனர். மேலும் கடந்தாண்டு ஜூன் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் லாடக் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு உதவியாக இந்தோ-திபெத்திய காவல் படையினர் மோதலில் ஈடுபட்டனர்.

இதில் மிகவும் துணிச்சலாக போராடிய 20 பேருக்கு வீரதீர போலீஸ் பதக்கம் வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம்  14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தோ-திபெத்திய எல்லைப் படையின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் அருகே உள்ள நொய்டாவில் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. அந்த விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சரான  நித்யானந்த் ராய் கலந்து கொண்டு 20 வீரர்களின் சீருடையில் பதக்கங்களை அணிவித்து அவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். அதிலும் அந்த 20 பேரில் 8 பேர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படையுடன் மோதியவர்கள் ஆவார்.

மேலும் ஆறு பேர் கடந்த ஆண்டு மே மாதம் நான்காவது பிங்கர் பகுதியில் மோதியவர்கள் என்றும்  மீதி 6 பேர் அதே நாளில் ஹார்ட் ஸ்பிரிங் பகுதியில் சண்டையிட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் வானிலை, காயம் போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் சுமார் 18 மணி நேரம் சீன படையினருடன் போரிட்டதாக இந்தோ-திபெத்திய எல்லைப் படை அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான சண்டையில் சிறப்பாக செயல்புரிந்த மூன்று  3 இந்தோ-திபெத்திய எல்லை வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Categories

Tech |