என் மீது காவி சாயம் பூச முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்த்தித்த நடிகர் ரஜினிக்காந்த் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் , திருவள்ளுவர் ஒரு மிகப் பெரிய ஞானி , அவர் ஒரு சித்தர். ஞானிகளும், சித்தர்களும் எந்த ஒரு மதத்தையும் , ஜாதியையும் சார்ந்தவர்கள் இல்லை. அவர்களை கட்டுப்படுத்த முடியாது , அதற்கு அப்பாற்பட்டவர். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை இருந்தவர். அவரின் குறளை பார்த்தல் தெரியும்.அவர் நாத்திகர் அல்ல அவர் ஆத்திகர் அதை யாரும் மறுக்கவும் முடியாது.
தொடர்ந்து பேசிய ரஜினி , பிஜேபி அவர்களுடைய ட்விட்டரில் சில விஷயங்களை போட்டால் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். பாஜக உறுப்பினராக என்னை மாற்றுவதற்கு முயற்சி நடைபெறுகின்றது.திருவள்ளுவருக்கு காவி பூசுவதை போல எனக்கும் காவி பூசப்பார்க்கிறார்கள். அதில் நானும் சிக்க மாட்டேன் , திருவள்ளுவரும் சிக்க மாட்டார்.உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் ரஜினி தடாலடியாக தெரிவித்துள்ளார்.