இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வேளையில் இரு அணிகளும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது தேச நலனுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் கருப்பு பணத்தை மீட்பது மூலம் எரிபொருள் விலை குறையும் என்று முன்பு ஒருமுறை பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். தற்போது அது குறித்து அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு தொடர்ந்து நலத்திட்டங்களை தேச நலனுக்காகவே செய்து வருகிறது. பல்வேறு வகையான நிதி சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால்தான் அரசால் வரியை குறைக்க முடியவில்லை. எனினும் என்றாவது ஒருநாள் இந்த கனவு நிறைவேறும் என்று அவர் கூறியுள்ளார்.