மிசா காலத்தில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று முக.ஸ்டாலின் விளக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் , மிசா காலத்தில் கைது செய்தது குறித்து இஸ்மாயில் கமிசன் , ஷா கமிசனில் முக. ஸ்டாலின் பெயர் இல்லை. MP ஆக இருந்த செழியன் மிசா கால கொடுமை குறித்து எழுதிய புத்தகத்திலும் ஸ்டாலின் கைது குறித்து பெயர் இல்லை. ஸ்டாலின் பெயர் இல்லாத பட்சத்தில் அவர் தான் உலகத்துக்கு சொல்லணும்.
நான் இந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டேன் என்று தெரியபடுத்த வேண்டும். ஆளுங்கட்சி தரப்பில் ஒரு குற்றச்சாட்டு சொல்லும்போது அதை குற்றச்சாட்டு குறித்து பதில் சொல்ல வேண்டியது எதிர்க்கட்சி தலைவரின் உண்மையான பொறுப்பு, அந்த வகையில் ஷா கமிஷனில் ஸ்டாலின் கைதுக்கான காரணம் இல்லை , இஸ்மாயில் கமிஷனில்காரணம் இல்லை , செழியன் எழுதிய புத்தகத்தில் காரணம் இல்லை , அவரின் பெயரும் இல்லை என இந்த 3 கேள்விக்கு முக.ஸ்டாலின் பதிலளிக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.