கொரோனா விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை சிங்கப்பூர் அரசு அறிவித்து உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு கடுமையான விதிமுறைகளை விதித்து இருந்தது. அதன்படி இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரில் தற்போது கொரோனா தொற்று ஓரளவு குறைந்து இருக்கிறது.
இதனால் அந்நாட்டு அரசு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதாவது இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடை நீக்கப்பட்டது. இது வருகின்ற 27-ம் தேதி முதல் செயலுக்கு வரும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் மேற்கூறிய நாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 10 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.