அமித்ஷா வருகைக்காக 700 பேரை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக மெகபூபா முப்தி குற்றம்சாட்டி உள்ளார்.
உள்துறை அமைச்சரான அமித்ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஒன்று பங்கேற்ற அமித்ஷா பின்னர் ஸ்ரீநகர்-ஷார்ஷா இடையேயான சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி அமித்ஷா வருகைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ற பெயரில் 700 பேரை பாதுகாப்பு படையினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். அவர்கள் காஷ்மீருக்கு வெளியே இருக்கும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மெகபூபா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகள் காஷ்மீரில் பதற்றத்தை மேலும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுவது குறித்து பதிவிட்டுள்ள மெகபூபா, ஏற்கனவே UP அரசால் 12 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டி இருக்கிறார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் மெகபூபா விமர்ச்சித்துள்ளார்.