Categories
Uncategorized

அது என்ன ? ”குஜராத்திக்கு மட்டும் தனி சலுகை” மம்தா கேள்வி …!!

ஐஐடி நடத்தும் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு கேள்வித்தாள் குஜாரத்தி மொழியில் வெளியான விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனப்படும் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் முதுகலைப் படிப்பில் சேருவதற்காக ஆண்டுதோறும் ஜே.இ.இ. மெயின்ஸ்( JEE Main) தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேட்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு இந்த இரு மொழிகள் மட்டுமில்லாமல் குஜராத்தி மொழியிலும் கேள்வித்தாள் இருந்தது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசை காட்டமாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த திடீர் மாற்றம் வரவேற்கத்தக்கதல்ல என்ற மம்தா, குஜராத்தி சேர்க்க முடிவு செய்யும்பட்சத்தில் வங்க மொழியையும் சேர்க்க வேண்டியதுதானே எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.பல மொழி, இனம், மதம், கலாசாரம் கொண்டுள்ள இந்தியாவில் பாகுபாட்டைப் புகுத்தும் விதமாக மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்ற மம்தா, மத்திய அரசின் இந்தச் செயல் மற்ற மாநில மக்களைப் பெரிதும் வருத்தத்திற்குள்ளாகியுள்ளது என்றார்.

Categories

Tech |