Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை…. கடலில் கலந்த தீக்குழம்பு…. சுற்றுசூழல் பாதிப்பு….!!

ஸ்பெயின் நாட்டில் எரிமலை வெடிப்பால் வெளியேறிய சாம்பல் கடலில் கலந்து சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் கும்ரி விய்ஜா எரிமலை வெடித்து சிதறி தீக்குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை குழம்பில் 2000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து சாம்பலானது. இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீட்புகுழுவினர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் லா பால்மாவின் கும்ப்ரே விய்ஜா எரிமலையில் இருந்து வெளிவந்த தீக்குழம்பு மற்றும் சாம்பல்கள் கடலில் சென்று கலந்துள்ளது. இதனால் கடற்கரையின் சுற்றுச்சூழல் அமைப்பு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிமலையில் இருந்து வெளியேறி, கடலில் கலந்த சாம்பல் மற்றும் தீக்குழம்புகள் சுமார் 400 மீட்டர் ஆழத்துக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.

Categories

Tech |