உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கெதிராக தொடர்ந்து தோல்வியடையும் நிலைமையை மாற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் கூறியுள்ளார் .
டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ‘சூப்பர்12 ‘சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் ‘சூப்பர் 12 ‘ சுற்று ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்பாக ஐசிசி உலகக் கோப்பை 50 ஓவர் மற்றும் டி 20 போட்டிகளில் இந்த இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளன. இதில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒருநாள் போட்டியில் 7 முறை மற்றும் டி ட்வென்டி போட்டியில் 5 முறையும் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில்,”உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியிடம் ,பாகிஸ்தான் தொடர்ந்து தோல்வி அடைந்தது என்பது எங்களை கடந்த ஒன்று .
அதோடு ஆட்ட நாளில் எங்களின் திறமையை பயன்படுத்தி வெற்றிபெற எண்ணுகிறோம் .எந்த ஒரு சாதனையும் முறிக்கப்பட வேண்டியதே. மேலும் டி20 உலகக் கோப்பை போட்டியில் நிதானமான நிலையில் விளையாடி எங்கள் திறமையை வெளிப்படுத்துவவோம்.அதோடு இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டம் பரபரப்பாக காணப்படும். இதனால் ஒரு நிமிடம் கூட இளைப்பாற கூடாது . அதோடு பேட்டிங் பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும். நாங்கள் இங்கு வருவதற்கு முன்பாக பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினோம் .இவர் கடந்த 1992-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி குறித்து பேசினார் .மேலும் அணி வீரர்களின் உடல்மொழி அப்போது எப்படி இருந்தது என்பதையும் அவர் கூறினார்”, இவ்வாறு பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.