ஒடிசா மாநிலத்தில் மனைவியை விற்று கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் 17 வயது சிறுவனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது செல் போன் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கணவன் தனது மனைவியை 55 வயதான முதியவருக்கு 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து சாப்பிடுவதற்கு செலவு செய்துவிட்டு, ஒரு ஸ்மார்ட் போனையும் வாங்கியுள்ளார்.
பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர் தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறியுள்ளார். இதை நம்பாத அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் ஓடிசா காவல்துறையிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அந்த சிறுவனை பிடித்து விசாரணை செய்தபோது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பதற்காக தனது மனைவியை விற்று விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அந்த பெண்ணை மீட்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காவல் துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.