தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புளியங்கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தன்னுடைய மகள் ஸ்ரீலேகா அன்பழகன்(22) என்பவரை போட்டியிட செய்தார். இதன்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஸ்ரீலேகா வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தபடியாக சுயேச்சையாக போட்டியிட்ட வேலுதாய் என்பவர் 1103 வாக்குகள் பெற்றிருந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் மானூர் யூனியன் சேர்மனாக ஸ்ரீலேகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சக உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவர்க்கு சால்வை அறிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் இளம் யூனியன் சேர்மன் என்ற பெருமை பெற்றுள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்த ஸ்ரீலேகா தன்னுடைய தந்தையின் அரசியல் செல்வாக்கால் உள்ளாட்சி அமைப்பின் மிக முக்கிய பதவியை அடைந்து உள்ளார். இது குறித்து ஸ்ரீலேகா கூறுகையில், எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. அந்த பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். என்னை போன்ற இளம் பெண்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.